ஞாயிறு, 10 ஜனவரி, 2021

பூமியின் சுழற்சியையே மாற்றிய அணை!

 

என்னடா இது பூமியோட சுழற்சியையே மாத்துற அளவுக்கு ஒரு அணை இருக்கான்னு ஆச்சர்யப்பட வைக்குதா இந்த தலைப்பு?. அட ஆமாங்க அப்டி ஒரு பிரமாண்ட அணையை  கட்டியும் வெச்சுருக்காங்கன்னா பாத்துகோங்களேன். 

இந்த பதிவுல 1045  சதுர கிலோமீட்டர் பரப்பளவு இருக்க, 39 கன கிலோமீட்டர் தண்ணீர் கொள்ளளவு இருக்க இராட்சத அணையை பத்திதான் தெரிஞ்சுக்க போறோம். இந்த அணையோட மொத்த நீர் அளவையும் எடைபோட்டா 4200  கோடி கிலோகிராம் வருமாம்! (அய்யோ).


Image by Pixabay

இப்டி ஒரு அணை எங்க இருக்குனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கீங்கதான?, அது வேற எங்கயும் இல்லைங்க சீனாவுல தான் இந்த பிரமாண்ட அணை இருக்கு. த்ரீ கார்ஜ் - Three Gorge (Gorge - மலையிடுக்கு) அணை தான் நாம இப்ப பாக்கபோறது. 

Image by Wikipedia

இதுதான்  உலகிலேயே மிகப்பெரிய அணை எனவும் சொல்லப்படுது. அணை நிரம்பும் போது கடல் மட்டத்துல இருந்து 175  மீட்டர் உயரத்துக்கு தண்ணி நிக்குமாம். அதுமட்டுமில்லை இதோட நீளம் 660  கிலோமீட்டர்ன்னும் அகலம் சராசரியாக 1.12 கிலோமீட்டரும் இருக்குதாம். அணை ஒடைஞ்சா என்ன ஆகும்னு நினைச்சாலே பீதியாகுதே!

யாங்சி (Yangtze) நதியில் கட்டப்பட்டிருக்கும் இந்த அணைதான் மிகப்பெரிய நீர் மின் நிலையமாகவும் இருக்குது. இந்த அணையிருந்து 22,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியுமாம்.

இந்த அளவு  4200 கோடி கிலோகிராம் நீரை கடல்மட்டத்திலிருந்து 175 மீட்டர் அளவிற்கு  ஒரே இடத்தில் தேக்கிவைப்பதன் மூலம் அதிகரிக்கும் எடையானது பூமியில் ஒரு மந்தநிலையை உருவாக்கி அதன் மூலம் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள் (நிஜமாவே அவங்கதான் சொல்லிருக்காங்க).

இந்த அதிக எடையானது சாய்ந்தே சுற்றிக்கொண்டிருக்கும் பூமியின் துருவத்தை சற்று இடமாற்றம் செய்துள்ளதாம். மேலும் இந்த எடையின் காரணமாக பூமி சுற்றும் நேரம்  0.06  மைகிரோ நொடிகள் அதிகமானதால் ஒருநாளின் அளவும் 0.06 மைகிரோ நொடிகள் மாறியுள்ளது. 

இது மிகப்பெரிய அளவு இல்லையென்றாலும் கணக்கிடும் அளவிற்கு உள்ள ஒரு மாற்றம் தான்னும் சொல்லிருக்காங்க. ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சுனு நம்ம தலைவர் சொன்னமாதிரி இவங்க பூமியையே கொஞ்சம் மெதுவா சுத்தவிட்டுட்டாங்க.

Share:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்