வலை தின்னி என்ற பெயரில் வலைப்பூவில் இயங்கும் நான் ஒரு இணைய நாடோடி. (என்னடா இது இணைய நாடோடியா? இணையங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் எனக்கு என்ன பெயர் வைக்க அதனால்தான் இப்படி. நல்ல பெயர் இருந்தால் சொல்லுங்களேன்).
இந்த வலைப்பூவில் நான் படிக்கும் விஷயங்களை அனைவர்க்கும் புரியும் விதத்தில் தமிழில் எழுத முயற்சிக்கிறேன். நீ என்னடா படிச்சு அதை மறுபடியும் எங்களுக்கு சொல்றது, அதுதான் பேஸ்புக் இருக்கு விக்கிபீடியா இருக்கு அங்க போய் நாங்க படிச்சுக்கமாட்டோமான்னு நீங்க நினைக்கலாம். ஆமா இந்த வலைப்பூவில் நீங்க படிக்கிறது எதுவுமே புதிய விஷயம் கிடையாது, எங்கயோ ஏதோ ஒரு மொழியில் இணையத்துல கிடைக்கிற விஷயம் தான். ஆனா இங்க அது உங்களுக்கு தமிழ் மொழியில், அதுவும் பல இணைய பதிவுகளை படிச்சு அதை தெளிவா ஒரு இடத்துல கொடுக்க ஒரு சிறிய முயற்ச்சி தான் இது.
இந்த பக்கத்துல நிறைய விஷயங்களை பேசலாம், நான் படிக்கிற, படிச்ச விஷயங்கள் அது எந்த துறை சார்ந்ததாக இருந்தாலும் இங்க அது பத்தி படிக்கலாம். முக்கியமா நான் கணினி துறை பின்னணியை சேர்ந்தவன்கிறதால அதிகம் இணையம், செல்போன் பற்றி அதிகம் செய்திகள் இருக்கும். ஏற்கனவே நிறைய தளங்கள் நிர்வாகித்து வந்தாலும் தமிழில் இதுதான் என்னுடைய முதல் வலைத்தளம். உங்களுடைய ஆதரவு கண்டிப்பாக தேவை. இணையத்தில் தமிழில் தேடல் முடிவுகளை அதிகரிக்க இதை ஒரு களமாக்கும் சிறிய முயற்சி. நன்றிகள் பல!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக